Tuesday, January 8, 2013

ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை


சொர சொரப்பான சருமத்திற்கு, முட்டையின் மஞ்சள் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து ‌விழுதா‌க்‌கி முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தைக் கழுவவு‌ம்.

எண்ணெய்ப் பசை சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன், அ‌தி‌ல் பாதி தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து ‌விழுதா‌க்‌கி, அதனை முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை கழுவவு‌ம்.

ஆழமான துளைகள் கொண்ட சருமத்திற்கு சோள மாவுடன் பால் கலந்து அடி‌த்து‌, அ‌தில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும்.

கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.

எல்லாவித சருமத்திற்கு‌ம், வெள்ளரி பேஸ்ட்டை செய்து முகத்தி‌ல் தடவவும். வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

No comments:

Post a Comment