Wednesday, January 9, 2013

தமிழகத்திலும் வருகிறது ஹெலிகாப்டர் சுற்றுலா


சென்னை, : பஸ்கள், ரயில்கள் மூலம் சுற்றுலாவை தொடர்ந்து ஹெலிகாப்டர் சுற்றுலா, கப்பல் சுற்றுலா திட்டங்கள் வருகின்றன. இத்திட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், ஊட்டி போன்ற இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பி லும் சுற்றுலாத்துறை சார் பிலும் சுற்றுலாத்தலங்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாத்தலங்களில் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள், அவர்களுக்கான வாகன வசதிகளை யும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் செய்துள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

கோயில்களை ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் ஆன்மிக சுற்றுலா, மலைவாசஸ்தலங்கள் சுற்றுலா என்று பல வகை திட்டங்கள் உள்ளன. அதேபோல ரயில்வே துறை சார்பிலும் சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே வரிசையில் சுற்றுலா துறையில் ஹெலிகாப்டர் சுற்றுலா மற்றும் கப்பல் சுற்றுலாக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பவான் ஹான்ஸ் என்ற தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே இதுகுறித்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து இந்த நிறுவனம் சார்பில் சென்னையில் இருந்து ஊட்டி, ராமேஸ்வரம், மதுரை, மூணாறு, கோவா, ஆக்ரா, டார்ஜிலிங் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட உள்ளன. அரசுக்கும் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே ஒரு நபருக்கு ஹெலிகாப் டர் கட்டணம் என்ன, ஒரு நாளைக்கு எத்தனை முறை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர் இயக்கப்படும் போன்ற விவரங்கள் தெரியவரும்.

அதேபோலவே அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா கப்பல்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கு கடல் சுற்றுலா என்று பெயரிடப்பட்டுள் ளது. இதுவும் தனியார் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை உலக பாரம்பரிய சின்னங்கள் 5, தொல் பொருள் ஆய்வுத்துறை யின் பராமரிப்பில் உள்ள சின்னங்கள்-95, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்கள் -247, கோட்டைகள்-11, மியூசியங்கள்-21, துறைமுகங்கள்-3, மலைவாசஸ்தலங்கள்-12 என்ற எண்ணிக் கையில் சுற்றுலா தலங்கள் உள்ளன.

No comments:

Post a Comment