Wednesday, January 9, 2013

வெளிநாட்டு சுற்றுலாக்களை எளிமையாக்குவோம்


கோவை, :சேலம் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் பேசுபவர்களுக்கு தமிழர்களால் நடத்தப்படும் சுற்றுலா நிறுவனம். ஐ.எஸ்.ஓ. தரச்சான்று, டாய் எனப்படும் டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் உறுப்பினர் என்ற அந்தஸ்துகளுடன் வெளிநாட்டு சுற்றுலாவை எளிமையாக்கியுள்ளனர். வாரம் தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் சேலம் டூர்ஸ் நிர்வாகத்தினர் கோவையில் முகாமிட்டு சுற்றுலா வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து தே� வகளை பூர்த்தி செய்கின்றனர். பெருநகரங்களில் மட்டுமே வெளிநாட்டு டிராவல்ஸ் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்த போது சிறு நகர் மற்றும் சாதாரண மக்களின் கனவுகளை அடிப்படையாக வைத்து சேலத்திலேயே வெளிநாட்டு சுற்றுலா நிறுவனம் தொடங்கினோம் என்கின்றனர் இதன் தலைவர் பாபு மற்றும் எம்.டி.சரவணன் ஆகியோர்.

எம்.டி.சரவணன் கூறியதாவது, சுற்றுலா வர விருப்பம் தெரிவித்தால் அவர்களின் வீட்டுக்கே சென்று விவரங்கள் பெற்று சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. நாங்களே உடன் சென்று வெளிநாடுகளில் அனைத்து தேவை களையும் கவனிக்கிறோம். உலகத்தில் எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்திய உணவு பெற்றுத் தருகிறோம். சுற்றுலா புறப்பட்டு மீண்டும் வீடு வரும் வரை கண்ணை இமை காப்பது போல் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரம மும் இன்றி கவனிக்கிறோம். தமிழகம் மட்டும் இன்றி தென்னிந்திய அளவில் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். உலகில் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளோம். முதலில் சுற்றுலா செல்ல எங்களிடம் வருபவர்களுக்கு அவர்களது பட்ஜெட், விருப்பம், தேவையை புரிந்து கொண்டு சுற்றுலாத் திட்டங்களை முன்வைப்போம். சில ஆண்டுக்கு பின்னர் சுற்றுலா செல்வதாக இருந்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை முடிவு செய்து கொண்டு அதற்கான சேமிப்பை துவங்குகின்றனர்.

ஒரு காலத்தில் மொழி த்தடை, உடன் வருபவர்களிடம் பேச முடியாத நிலை, வெளிந ட்டில் எங்கு சாப்பிடலாம், எங்கு ஷாப்பிங் செல்லலாம் என்பது போன்ற தெளிவின்மையால், அதிகம் படித்தவர்கள் அல்லது ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும் என்ற நிலை காணப்பட்டது. தமிழ் பேசத் தெரிந்தவர்களை மட்டுமே சுற்றுலா அழைத்துச் சென்று இதை மாற்றினோம்.பாஸ்போர்ட், விசா உட்பட அனைத்து தேவைகளையும் வீட்டுக்கே சென்று நிறைவேற்றினோம். சுற்றுலா செல்லும் நாட்டில் உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் புத்தகமாக வழங்கப்பட்டு விடும். சுற்றுலா செல்லும் நாட்டில் எந்தெந்த இடங்களுக்கு போக வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுகின்றனர். உடன் வருபவர்கள் சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், நட்பை ஏற்படுத்தவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. அமெரிக்காவில் நாசா, நயாகரா, வெள்ளை மாளிகை மற்றும் உலகின் முதன்மை கேளிக்கை நகரமான லாஸ் வேகாஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்த்து வரலாம். ஐரோப்பிய சுற்றுலாவில் ஒரே ட்ரிப்பில் 10 நாடுகளை பார்த்துத் திரும்பலாம். ரஷ்யா, சீனா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறோம். விருப்பமும், வசதியும் இருந்தால் போதும் சாதாரண மக்களும் வெளிநாட்டு சுற்றுலா செல்லலாம். அந்தளவுக்கு வெளிநாட்டு சுற்றுலாவை எளிமையாக்கியுள்ளோம் என்கிறார் சரவணன். மேலும் விவரங்களுக்கு சேலம் நான்கு ரோடு சாமுண்டி வணிக வளாகத்தில் உள்ள சேலம் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவனத்தை நேரில் அணுகலாம். 

No comments:

Post a Comment