Wednesday, January 9, 2013

ஊட்டி 2வது சீசன் மழையுடன் துவக்கம்

ஊட்டி, :ஊட்டியில் 2வது சீசன் மழைக்கிடையே துவங்கியது. நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. எஸ்டேட்களில் காய்ந்த தேயிலை செடிகள் உயிர் பெற்றுள்ளன. காய்கறி தோட்டங்களில் பசுமை திரும்பியுள்ளது. குடிநீர் ஆதார அணை களுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நீர் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று சூறாவளி காற்றுடன் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கலெக்டர் அலுவலகம் - சிஎம்எம் பள்ளி சாலையில் மின் கம்பி மீது ராட்சத மரம் முறிந்து விழுந்ததில், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரும் சேதமானது. மின் சப்ளை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து வருகின்றன. பகல் நேரங்களிலேயே கடும் குளிர் வாட்டுகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் லாட்ஜ் அறைகளை விட்டே வெளியேறவில்லை. கேரளாவில் ஓணம் விடுமுறையால், ஊட்டி யில் கேரள சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் மழையுடன் இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. தாவரவியல் பூங்காவில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மழை சற்று தடையாக இருந்தபோதிலும், விரைவில் சீசன் களைகட்டும். நவம்பர் வரை சீசன் தொடரும்.

No comments:

Post a Comment