Wednesday, January 9, 2013

2வது சீசனுக்கு தயாராகும் ஏற்காடு

ஏற்காடு,: ஏற்காட்டில் 2வது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்கா பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு துறை, சேர்வராயன் கோயில், லேடீஸ் மற்றும் ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட் கல் கோபுரம் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக உள்ளது. கோடை காலத்தில் ஏற்காட்டிற்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவர். மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக நடத்தப்படுகிறது.

ஏற்காட்டில் 2வது சீசன் டிசம்பர் மாதத்தில் துவங்கும். பிப்ரவரி மாத துவக்கம் வரை நீடிக்கும் இந்த சீசன் காலங்களில் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த பயணிகளை ஈர்ப்பதற்காக பூங்கா பராமரிப்பு பணிகள் தற்போது துவங்கியுள்ளன. பூங்காவில் உள்ள ரோஜா செடிகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே நன்கு வளர்ந்த ரோஜா செடிகளின் கிளைகளை துண்டித்து, புதிதாக கிளைகள் முளைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள பூக்கள், தேவையற்ற செடி பாகங்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment