Wednesday, January 9, 2013

ஊட்டியில் 2வது சீசனில் தேயிலை விழா


ஊட்டி, ;நீலகிரியில் தேயிலை சாகுபடி மற்றும் தேயிலைத்தூள் உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. தேயிலைத்தூளுக்கு போதிய விலை கிடைக்காததால் பசுந்தேயிலைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் தவிக்கின்றனர். நீலகிரியில் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை தொழிலை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளிடையே தேயிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஊட்டியில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா நடத்தப்படுகிறது. 2வது சீசனில் 3 நாள் நடத்தப்பட்டு
வந்தது.

தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை தூள் உற்பத்தியாளர்கள் பல்வேறு தேயிலைத்தூள்களை கண்காட்சியில் இடம்பெற செய்வர். நீலகிரியில் தயாராகும் பல்வேறு கைவினை பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படும். உணவு திருவிழா, ஜம்பூரி ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படும். இது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். 2010ம் ஆண்டு கார் கால விழா மற்றும் தேயிலை சுற்றுலா விழா அக்டோபரில் நடத்தப்பட்டது.

கடந்த முறை பல்வேறு காரணங்களால் தாமதமாக பிப்ரவரியில் நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் வராத நேரத்தில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா நடத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை. இம்முறையாவது வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் 2வது சீசனில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா நடத்தப்பட வேண்டும் என விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment