Wednesday, January 9, 2013

பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் : சுற்றுலா பயணிகளுக்கு தடை


உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம் ஆகியவை உள்ளன. இவற்றை காண தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

இந்நிலையில், திருமூர்த்தி மலைப்பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டியது. மழையின் தீவிரம் அதிகரிக்கவே நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தவாறு காட்டாற்று வெள்ளம் சென்றது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment