Wednesday, January 9, 2013

சுகாதாரக்கேடு

 கொடைக்கானல் ஏரியில் கலக்கும் உணவு கழிவுகளால் 



கொடைக்கானல், :கொடைக்கானலில் உள்ள ஓட்டல் நிறுவனங்களில் சேரும் உணவு கழிவுப் பொருட்கள், இங்குள்ள ஏரியில் கலந்து விடப்படுகின்றன. எந்த அனுமதியும் இன்றி பைப் லைன்கள் மூலம் ஏரிக்கு சென்று சேரும் வகையில் இவை அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏரியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கோகர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, மோயர் பாய்ன்ட் உள்பட பல்வேறு இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசித்த பின்னர் பிரையன்ட் பூங்காவுக்கு வருகின்றனர்.

ஆனால் அனைத்தையும் விட கொடைக்கானலின் இதய பகுதியாக விளங்கும் ஏரியில் படகு சவாரி செய்வதையே சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இந்த ஏரியில் படகு சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகளுக்கு அலாதி சுகம். கொடைக்கானலை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்றுலா வருவோரும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஏரியை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இந்த ஏரியை மாசுபடுத்தும் வேலையில் சத்தமில்லாமல் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இங்குள்ள பெரிய ஓட்டல்கள் மற்றும் பள்ளி விடுதிகளில் சேரும் உணவு கழிவு பொருட்கள் இந்த ஏரியில் கலந்து விடப்படுகின்றன. அன்டர் கிரவுண்டல் உள்ள பைப் லைன் மூலம் இந்த கழிவு பொருட்கள் ஏரியில் வந்து கலக்கின்றன. இதற்கு யாரிடமும் எந்த அனுமதியும் பெறவில்லை.
தினமும் காலையில் ஏரியை சுற்றி வந்து பார்த்தால் உணவு கழிவுகள், எண்ணெயுடன் மிதந்து வருகின்றன. இதை பார்க்கும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.

மேலும் ஏரியில் படகு சவாரி செய்பவர்களும் முழுமையாக சுற்றி வர முடியாத அளவுக்கு இந்த கழிவு பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இயற்கை எழில் மிகுந்த ஏரியை மாசுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் எதிர்பார்க்கின்றனர். 

No comments:

Post a Comment