Wednesday, January 9, 2013

தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் களைகட்டுகிறது


ஊட்டி, : ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் ஆண்டுதோறும் 2 சீசன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதல் சீசன் கோடை காலத்திலும், 2வது சீசன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வரும். 2வது சீசனில் பெரும்பா லும் வெளிநாடு மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் புதுமண தம்பதிகள் வருவது வழக் கம். தற்போது இந்த சீசன் துவங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்கள் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. இங்கு வரும் பயணி களை மகிழ்விக்கும் வகை யில் தாவரவியல் பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மலர் கண்காட்சியின் போது 10 ஆயிரம் தொட்டிகள் அலங்கரிக்கப்படுவது போல இந்த சீசனிலும் மலர் தொட்டிகள் வைத்து அலங்கரிக்க தீர்மானிக்கப்பட்டது. கடந்த வாரம் பூங்காவில் உள்ள மாடத்தில் 8 ஆயிரம் தொட்டிகள் அடுக்கும் பணிகள் நடந்தது. மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, டேலியா உட்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஊட்டிக்கு அதிகளவு பயணிகள் வந்து செல்வதால் லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன.

No comments:

Post a Comment