Wednesday, January 9, 2013

ஊட்டியில் 2வது சீசன் நிறைவு

ஊட்டி: நீலகிரியில் 2வது சீசன் நிறைவடைந்துள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரியில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2வது சீசன். தற்போது 2வது சீசன் நிறைவடைந்துள்ளது. ஊட்டியில் தற்போது உறைபனி கொட்டி வருகிறது. இருப்பினும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் ஓரளவு வருகின்றனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பார்வையிடுகின்றனர்.

விடுமுறை அல்லாத நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரை யாண்டு தேர்வு விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு அதிகரிக்கும். மார்ச் மாதத்தில் கோடை சீசன் துவங்கும். ஏப்ரல், மே மாதங்களில் இது களைகட்டும். தாவரவியல் பூங்கா, மே மாதம் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக தற்போதே தயாராகிவருகிறது.

ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்றவற்றிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டியில் இருந்து 22 கி.மீ தொலைவில் கூடலூர் சாலையில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளன. இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. பைக்காரா அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்.

No comments:

Post a Comment