Wednesday, January 9, 2013

பைக்காரா நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து குறைவு




ஊட்டி, : பருவமழை குறைவு காரணமாக பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நீர்வீழ்ச்சியை காண செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டி - கூடலூர் சாலையில் 22 கி.மீ தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி உள்ளது. பைக்காரா அணை மின் உற்பத்திக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

அணை மின் உற்பத்திகாக திறந்து விடும் போது அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இந்நிலையில், மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த மாத துவக்கத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்கள் பெய்தது. நிலம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் மழை பெய்தது. அணைகளில் ஓரளவிற்கு தண்ணீர் நிறைந்தது.

அதன் பின் மழை பெய்யவில்லை. மாறாக வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது பைக்காரா அணையில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளது. இருப்பினும் குறைந்த அளவிலான தண்ணீர் திறந்து விடப்படுவதால் பைக்காரா நீர் வீழ்ச்சியில் குறைந்தளவே தண்ணீர் செல்கிறது. நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர். பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வருவதால் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி களையிழந்துள்ளது 

No comments:

Post a Comment