Wednesday, January 9, 2013

ஊட்டி மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்


ஊட்டி, : ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு மலைச்சரிவுகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு மலைப்பகுதிகளில் அரிய வகை குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது. சங்க கால இலக்கியங்களில் இடம் பிடித்த குறிஞ்சி மலர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை முதல் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் வகைகளை கொண்டது. சுமார் 100க்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட இம்மலர்கள் பொதுவாக மலைகளில் அதிகளவு காணப்படும். மலர்கள் மலைச்சரிவு முழுவதும் பூப்பதால், தொலைவில் இருந்து பார்க்கும் போது அந்த மலையே மலர் கம்பளம் போட்டு மூடி வைத்தது போல் காட்சியளிக்கும். தற்போது ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு மலைச்சரிவுகளில் ஏராளமான குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

மலர்கள் மலை முழுவதும் உள்ள செடிகளில் பூத்துள்ளதால் தொலைவில் இருந்து பார்க்கும் போது நீல நிற கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எப்பநாடு மலைச்சரிவுகளில் அடிக்கடி குறிஞ்சி மலர்கள் பூக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலை முழுவதும் பூக்கும். கடந்த 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது மலை முழுவதும் பூத்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் கவர்ந்துள்ளது என்றனர்.

No comments:

Post a Comment