திருக்கோஷ்டியூர் (தொடர்ச்சி)
கோயிலுக்குள் நுழையும்போது பலிபீடம், துவஜஸ்தம்பத்தைப் பார்க்கும் நாம், பின்னால் நந்தியையும் காணும்போது மெல்லிய வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது. ஆமாம், இங்கே ஒரு சிவ சந்நதியும் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரண்ய வதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதன் சாட்சி! இவரை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதிக்கு முன்னால் ஈசனைப் பார்த்தபடி நந்தி அமர்ந்தி ருக்க, சந்நதிக்குள் சிறு உருவில் இந்த லிங்கம் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு முன்னால், சந்நதிக்குள் வேல் தாங்கிய முருகன், சந காதி முனிவர்கள், நாகர் சிலைகளும் காட்சியளிக்கின்றன. சௌமிய நாராயணன் சந்நதிக்குப் பின்னால் இந்த சிவ சந்நதி அமைந்துள்ளது.
கோயிலினுள் நுழைந்ததுமே இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் (இவருடன் இவரது திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன் -சீதை-லட்சுமணன்-அனுமனும்) தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் மனதளவில் புரிந்துகொண்டு, பரந்த சமு தாய நலனுக்கு செய்த முயற்சிகள் நினைவுக்கு வர, இந்தப் பெருமகனார் முன் நிற்கும்போது கண்களில் நீர்த் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்து, சக்கரத்தாழ்வார் அருள் தரிசனம் நல்குகிறார். சற்றுப் பக்கத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகுற காட்சியளிக்கிறார். இதே தோற்றத்தையும், கிருஷ்ணனின் இன்னும் பல வான அழகுத் தோற்றங்களையும், இந்தத் தலத்தில் தரிசித்து மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அப்போது மதுரையை ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய குரு, செல்வநம்பி என்பவர். திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவரான செல்வநம்பி வருடந்தவறாமல் கிருஷ்ணனின் அவதார விழாவை இந்த ஊரில் சிறப்பாக நடத்துவார். ஒருமுறை அவர் பெரியாழ்வாரை இந்த விழாவைக் காணவருமாறு அழைப்பு விடுத்திருந்தார். வந்த பெரி யாழ்வார் அப்படியே பிரமித்துப் போய் நின்றுவிட்டார். அவருக்கு திருக்கோஷ்டியூர், ஆயர்பாடியாகவே தெரிந்தது. அங்கே கண்ணனின் குறும்புத்தனங்க ளைக் கண்டு மனம் விம்மினார். ‘வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்’ என்று பாடி சிறப்பித்தார். அவர் க ண்டு களித்த காட்சிகளில் ஒன்றுதான் இந்த (காளிங்க) நர்த்தன கண்ணன் வடிவம். இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் நின்றும், கிடந்தும், அமர்ந் தும், நடந்தும் தனது பலவகை திவ்ய சொரூபங்களைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார். இந்த நர்த்தன கிருஷ்ணன் உருவம் நடந்த திருக்கோலத்தைக் காட்டுகிறது.
அடுத்து, உற்சவரான சௌம்ய நாராயணனை தரிசிக்கலாம். ஸ்ரீதேவி-பூதேவி சமேத இந்த உற்சவர் முற்றிலும் தூய வெள்ளி உலோகத்தால் ஆனவர். ‘வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன்’ என்று திருமங்கையாழ்வார் இந்த உற்சவரை பாடி மகிழ்கிறார். இவரை தரிசித்து விட்டு மேலே சில படி கள் ஏறி தேவலோகத்துக்குச் செல்லலாம். இங்கே பெருமாள் சயன கோலத்தில் அற்புத தரிசனம் தருகிறார். இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந் திருக்கிறார்கள். வழக்கம்போல ஸ்ரீதேவி-பூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க, வழக்கம்போல இல்லாமல் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார். ஆமாம், இங்கே, பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள்! இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். இந்தத் தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார்.
பெருமாளின் திருவடியருகே அடங்கிப்போன மது-கைடப அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான அதாவது புதனின் மகனான புரூரவ சக்கரவர் த்தி என்று ஒரு திருமாலடியார் பெருங்கூட்டமே காட்சி தருகிறது. இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியமையால் ‘ஸ்தித நாராயணன்’ என்றும் திரு மால் பெயர் கொள்கிறார். பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டதால், ‘உரக மெல்லணையான்’. உரகம் என்றால் பாம்பு. மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை. உரக மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கும், அருகே, மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும்தான் இத்தகைய, ஆகம விதிகளுக்குட்பட்ட அஷ்டாங்க விமானத்தைக் காண முடியும்!
இந்த விமானத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. இதன் வடபகுதியை மயன் என்ற அசுரத் தச்சனும், தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்ச னும் அமைத்தார்கள். மூன்று பகுதிகள் கொண்ட அஷ்டாக்ஷர மந்திரம் போன்றும், மூன்று எழுத்துகள் கொண்ட ஓங்கார ஒலி போன்றும், மூன்று நிலைகளை இந்த விமானம் பெற்று விளங்கியது.
‘‘பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து, புலன்கள் ஐந்து, பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்
நாதனை, நரசிங்கனை, நவின்று ஏத்துவார்கள் உழக்கிய
பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே’’
-என்று பாடிப் பரவசப்படுகிறார் பெரியாழ்வார்.
அதாவது, பஞ்சபூதங்களால், ஐந்து பெரும் யாகங்களைச் செய்பவர்களும், ஐம்புலன்களிலும் எந்தக் குற்றமும் இல்லாதவர்களும், கொடைத்தன்மை நிரம்பியவர்களும் ஆகிய திருமால் அடியவர்கள் வாழும் திருக்கோட்டியூருக்குத் தலைவனாக, சிங்கப்பெருமானாக அவதரித்தவனைப் போற்றித் துதித்து வழிபடுகிறார்கள் அடியார்கள். இந்த அடியார்களின் திருவடிகளிலிருந்து உதிரும் துளிகளால் இந்த உலகமே பெரும் பாக்கியம் செய்துள்ளது என்கிறார்.
இப்படி இரண்யனை வதம் செய்வதற்காகத் தோன்றிய நரசிங்கம், இங்கே வானுலக தச்சர்களால் வெகுசிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விஸ்வ கர்மா உருவாக்கிய நரசிம்மர் இரண்யனைப் பிடித்துக் கொள்ளும் வகையிலும், மயன் உருவாக்கிய நரசிம்மர், இரண்யனை மடியில் கிடத்தி சம்ஹாரம் செய்யும் வகையிலும் அமைந்திருக்கின்றன.
இவ்வாறு தென்திசை நோக்கிய நரசிம்மரை தெற்காழ்வான் என்றும் வடதிசை நோக்கியவரை வடக்காழ் வான் என்றும் போற்றுகிறார்கள். அடுத்து, இரண்டாவது தளத்தில் இந்திரலோகம் திகழ்கிறது. இங்கே பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு அவ்வளவு சுலபமாகப் போய்விட முடியாது. குறுகலாக மேலேறும் படிகள். ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் போக முடிகிறது. பரமபதம் அடைவது அவ்வளவு சுலபமா என்ன! மிகவும் சிறப்பு வாய்ந்த தளம் இது. ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக வைகுண்டநாதன் அழகு தரிசனம் தருவதால் மட்டுமல்ல; கோபுரத் தின் இந்த உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், அதன் பலனை யும் பகிரங்கமாக அறிவித்தார்.
ஊரைப் பார்த்தவண்ணம் அவரது திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை அருகிலேயே செ ன்று பார்க்க முடியும் என்பதால், அதனருகே நிற்கும்போது மெய் தானாகவே சிலிர்க்கிறது. அந்த மகான் நின்ற இடத்தை நம் காலால் மிதிக்க வேண் டியிருக்கிறதே என்ற வெட்க உணர்வும் மேலிடுகிறது. அந்தத் தரையைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு, அவரிடம் மன்னிப்பு கேட்பதோடு அவ ரது ஆசியையும் பெற மனம் விழைகிறது. இந்த கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியைக் காணலாம். நம்பி யின் வம்சாவழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற தகவல் சந்தோஷத்தைத் தருகிறது.
கீழிறங்கி வந்து தாயார் திருமாமகள் நாச்சியாரைக் கண்குளிர தரிசனம் காணலாம். இவருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகளென்றும் திருநா மங்கள் உண்டு. வெளிப் பிராகாரத்தில் மகாமகக் கிணறு ஒன்று இருக்கிறது. இதனை சிம்மக் கிணறு என்றும் சொல்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே தீர்த்தவாரி காணும் சௌம்ய நாராயணரோடு பக்தர்களும் நீராடுவது வழக்கம். காரைக்குடி-மதுரை வழியில் 24 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருக்கோஷ்டியூர். காரைக்குடி-சிவகங்கை பாதையில் திருப்பத்தூரிலிருந்து 5 கி.மீட்டரில் உள்ள அரியக்குடி சென்றும் இத்தலம் அடையலாம். ஆலயத் தொடர்புக்கு: 04577-261248, 04577-261103; 98430 53197; 94434 08285
படங்கள்:
பொ. பாலமுத்துகிருஷ்ணன், எம்.என்.ஸ்ரீநிவாசன்
(அடுத்த தரிசனம், திருமோகூர் காளமேகப் பெருமாள்)
பிரபுசங்கர்
திருக்கோஷ்டியூர் சென்று நின்று, கிடந்து, அமர்ந்து, நடந்து காட்சிதரும் பெருமாளை தரிசிக்கும்வரை கீழ்க்காணும், திருக்கோஷ்டியூர் தியான ஸ்லோ கத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:
தியான ஸ்லோகம்
க்யாதே கோஷ்டிபுரே ப்ரஸித்த விபவ: ஸ்ரீ ஸௌம்ய நாராயண:
தீர்த்தம் திவ்யஸரோ விமாநம் அமலந்த் வஷ்டாங்க நாமாத்புதம்
தஸ்யஸ்ரீர் தயிதா கதம்பமுநயே ப்ரத்யக்ஷ ரூபப் புரா
கோஷ்டீ பூத ஸமஸ்த தேவநிகரோ, தேவ: புரஸ்தாந்முக:
-ஸ்ரீவிஷ்ணு ஸ்தலாதர்சம்
பொதுப் பொருள்:
புகழ்பெற்ற கோஷ்டீபுரம் என்னும் திருக்கோட்டியூர் திவ்ய தேசத்தில், ஸௌம்யநாராயணன் என்னும் திருப்பெயருடன் திகழும் பெரு மாளே நமஸ்காரம். திருமாமகள் நாச்சியாருடன் அஷ்டாங்க விமான நிழலில், தேவ புஷ்கரணிக் கரையில், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தை உடையவரே, ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே, கதம்ப முனிவருக்கும் அனைத்துத் தேவர்க்கும் காட்சி கொடுத்தருளிய பெருமாளே நமஸ்காரம்.

No comments:
Post a Comment