Wednesday, January 9, 2013

ஊட்டி மலைப்பாதையில் யானைகள் ஜாலி உலா


குன்னூர், : நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 15க்கும் மேற்பட்ட யானைகள் 4 குழுக்களாக பர்லியார், மரப்பாலம், கே.என்.ஆர், ரன்னிமேடு ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக முகாமிட்டுள்ளன. இதில் 2 குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் குன்னூர் அருகேயுள்ள நான்சச் பகுதியில் உள்ள பேரிக்காய் தோட்டத்தில் முகாமிட்டு, அங்குள்ள பேரிக்காய் மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
அப்பகுதியில் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று காலையில் இருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர். பகுதியில் சுற்றி வந்த 5 யானைகளில் 2 யானைகள் அவ்வப்போது, சாலை யின் நடுவே அங்கும், இங்கும் அலைந்து திரிந்தன.

வாகன ஓட்டிகள் பீதியடைந்ததுடன் தங்கள் வாகனங்களை பின்னோக்கி எடுத்துச் செல்ல முயன்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யானைகள் சாலை யிலேயே நின்றுகொண்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகளை விரட்ட தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட இயலவில்லை. மலைப்பாதையில் முகாமிட்டுள்ள யானை களை உடனடியாக விரட்ட வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். 

No comments:

Post a Comment