Wednesday, January 9, 2013

பெர்சிமன் பழங்களை வாங்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்


குன்னூர்,-நீலகிரி மாவட்டம், குன்னூர் தோட்டக்கலைப்பண்ணையில் பல்வேறு வகை பழ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாக விளங்கும் பெர்சிமன் பழ மரங்கள் 110 உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இதன் சீசன் காலம். தக்காளி போல் இருக்கும் இந்த பழத்தை பறித்த உடனே சாப்பிடக்கூடாது; துவர்ப்பு சுவை இருப்பதால் எத்தனால் திரவத்தில் நனைத்த பின்னர்தான் சாப்பிட வேண்டும். வைட்டமின் சத்து அதிகளவில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

பண்ணையில் ஒரு கிலோ பெர்சிமன் பழம் ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் சீசன் நிறைவு பெறும் நிலையில் 700 கிலோ வரை பெர்சிமன் பழம் கிடைக்கும் என அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு 525 கிலோ மட்டுமே கிடைத்தது. இந்த ஆண்டு மகசூல் அதிகரித்ததன் காரணமாக அதன் வரத்தும் கூடுதலாகி உள்ளதால் தோட்டக்கலைத்துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment