Wednesday, January 9, 2013

குன்னூர் சிம்ஸ் பூங்கா பொலிவடைகிறது


 

குன்னூர், :நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன் வரை பரவலாக மழை பெய்தது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென மழை நின்று மேக மூட்டத்துடன் லேசான மழை சாரல் மற்றும் சூறாவளி காற்று என சீதோஷ்ண நிலை தலை கீழாக மாறி உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. தேயிலை மற்றும் மலை தோட்ட காய்கறி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்சிமுனை பகுதிகளில் நேற்று காலை முதல் பகலை இரவாக்கும் வகையில் மேக மூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊர்ந்து சென்றன.

சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை பார்க்க இயலாமல் ஏமாற்றம் அடைந்தனர். 2வது சீசனுக்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவை பொலிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள புல்வெளிகள் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சி செடியை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சூறாவளியால் தேயிலை செடிகளில் உள்ள அரும்புகள் சேதம் அடைந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் தேயிலை மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment