Wednesday, January 9, 2013

வெள்ளோடு சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு


ஈரோடு, : வெள்ளோடு சரணாலயத்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதால், சீசன் களைகட்டி வருகிறது.
ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் 12 கி.மீ தூரத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், 215 ஏக்கரில் அமைந்துள்ளது. செப்டம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை, இங்கு பறவைகள் வரும் சீசன். இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் பறவைகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

பெலிக்கான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகிடா, பெரிய நீர்காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோழி உள்ளிட்ட பறவைகள் உள்ளன. சீசன் காலங்களில் கடற்கரை பகுதிகளில் இருந்து வண்ணான் நாரை, கோழிகிடா, சைபீரியாவில இருந்து கொசு உல்லான், ஆஸ்திரேலியாவில் இருந்து கூழைகிடா ரக பறவையும் அதிக அளவில் இங்கு வருகின்றன.

மழை பெய்ய தொடங்கியுள்ளதாலும், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பறவைகள் கூடு கட்ட வசதியாக பனை மரத்தில் துளையிடப்பட்டுள்ளது. சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏரி நடுவில் உள்ள தோப்பில் பறவைகள் அமர்ந்து ஒலி எழுப்புவதை பார்த்து மகிழ, சுற்றுலா பயணிகளுக்காக பைனாகுலர்கள் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment