Wednesday, January 9, 2013

சுற்றுலா நடவடிக்கை துவக்க சர்வே


வால்பாறை, : புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை துவங்க சர்வே நடந்துவருகிறது. புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடும் நிபந்தனைகளுடன், உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கியது.
இதையடுத்து, புலிகள் காப்பக பகுதியில் குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் (ஜி.பி.எஸ்) மூலம் வனத்துறை ஊழியர்கள் சுற்றுலா தலங்களையும், பயன்பாட்டுப் பகுதிகள், வன எல்லைகள், தேயிலைத்தோட்ட எல்லைகள், நீர் நிலை மற்றும் சதுப்பு நிலங்களை மார்க்கிங் செய்து வருகின்றனர்.
இப்பணிகள் தற்போது தமிழகத்தில் உள்ள ஆனைமலை, களக்காடு முண்டன்துறை, முதுமலை புலிகள் காப்பக பகுதியில் நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் முடிந்தபின், புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

958 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 192 ச.கி.மீ பரப்பில் சுற்றுலா திட்டங்களைச் செயல்படுத்த முடியும். சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளை வனத்துறை சுற்றுலா திட்டத்தில் இணைக்க சர்வே நடந்துவருகிறது. ஆக்கிரமிப்புகள் சர்வே: வன ஆக்கிரமிப்பு தோட்டங்கள், கட்டிடங்கள், நீர்நிலை பகுதிகள் உள்ளிட்டவைகளும் துல்லியமாக கணக்கிடப்பட உள்ளது. இவ்வகை சர்வே செய்யப்பட்டால் எதிர்காலத்தில் வனப்பகுதியில் அத்துமீறல்கள் தவிர்க்கப்படும். மலைப்பகுதி பாதுகாக்கப்படும். ஆக்கிரமிப்பு தேயிலைத்தோட்டங்கள் மீண்டும் வனப்பகுதியாக மாற்றப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment