Wednesday, January 9, 2013

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி,:நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தது. ஆயுத பூஜை, விஜயதசமி நாளில் மழை குறைந்திருந்தது. வெயில் இல்லாமல் மிதமான காலநிலை நிலவியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. அரசு தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சியை போன்று 7,500 மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு அலங்கார மேடைகளில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தொடர் மழையால் மலர்கள் அழுகி உதிர துவங்கியுள்ளன.

கடந்த 2 நாளில் மட்டும், பூங்காவை பார்வையிட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். படகு இல்லத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் 2வது சீசன் களைகட்டி உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள், ஊட்டிக்கு இயக்கப்பட்டன. தொடர்ந்து பக்ரீத் விடுமுறையும் வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment