Wednesday, January 9, 2013

கொடைக்கானல் துண்டிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

கொடைக்கானல், : கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில், கொடைக்கானலில் இருந்து 40 கிமீ தொலைவில், வத்தலக்குண்டு சாலையில், வாளகிரி பகுதியில் சாலையோரம் இருந்த இரு ராட்சத மரங்கள் திடீரென சாய்ந்து விழுந்தன. சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் வத்தலக்குண்டு - கொடைக்கானல் இடையே போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.

மதுரையில் இருந்து கொடைக்கானல் வந்த வாகனங்கள் மற்றும் கொடைக்கானலில் இருந்து கீழிறங்கிய வாகனங்கள் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கில் ஸ்தம்பித்து நின்றன. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர். நவீன கருவிகளுடன் சாலையின் குறுக்கே கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து, நள்ளிரவு 11 மணிக்கு மீண்டும் போக்குவரத்து சீரானது.

இதனால், இரவு 8 முதல் 11 மணிவரை 3 மணிநேரம் போக்குவரத்து பாதித்து பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். குறிப்பாக, சாலையில் ஸ்தம்பித்து நின்ற வாகனங்களில் இருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என சுற்றுலாப்பயணிகள் குளிரில் நடுங்கியவாறு அவதிப்பட்டனர்.

No comments:

Post a Comment