Wednesday, January 9, 2013

ஆகாய கங்கையில் குளிக்க மீண்டும் தடை


நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் 10 நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் செம்மண் நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. காட்டாற்று வெள்ளத்தில் பாறாங்கற்களும், மரங்களும் அடித்து வரப்பட்டதால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரம் நீடித்த தடை உத்தரவு கடந்த 29ம் தேதி நீக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு வந்தனர். தற்போது மீண்டும் மழை பொழிவு அதிகரித்துள்ளதால் அருவில் பாராங்கல், மரங்கள் விழுகிறது. இதனால் கொல்லிலை மலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு 2 நாளில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

No comments:

Post a Comment