Wednesday, January 9, 2013

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு


தென்காசி, : குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வரு கிறது. ஊருக்குள் குறிப்பிடத்தக்க அளவில் மழை இல் லாத நிலையிலும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பிற்பகல் 3 மணி அளவில் ஐந்தருவி யில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பாதுகாப்பு கருதி சுமார் ஒரு மணி நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்கதடை விதிக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் தண்ணீர் கட்டுக்குள் வந் ததை தொடர்ந்து குளிக்க அனுமதிக்கப்பட்டனர். எனி னும், சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவா கவே காணப்பட்டது. பெயரளவிற்கு ஒரு சிலரே அருவி யில் ஹாயாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மெயினருவி, பழையகுற்றால அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

No comments:

Post a Comment