Wednesday, January 9, 2013

வள்ளுவர் கோட்டத்தில் பயண, சுற்றுலா கண்காட்சி


சென்னை, :சென்னை வள்ளுவர் கோட்டம் அரங்கில் ‘வாயேஜ் எக்ஸ்போ’ (பயணம், சுற்றுலா கண்காட்சி) நாளை (19-ம் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். சொகுசு பஸ், ரயில், விமானம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா துறைகள், கேளிக்கை பூங்காக்கள், விடுதிகள், ஹெல்த் ஸ்பா, கரன்சி மாற்றம், பாஸ்போர்ட், விசா எடுக்கும் முறைகள், பயணத்துக்கு தேவையான உபகரணங்கள் உள்பட பயணம் அல்லது சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இக்கண்காட்சியில் இடம்பெறும்.

ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா, தேனிலவு மற்றும் மருத்துவ சுற்றுலா ஆகியவை குறித்தும் தெரிந்துகொள்ளலாம். இக்கண்காட்சியில், நாட்டிலேயே முதல்முறையாக விமான நிறுவனங்கள், விமான டிக்கெட்களை பொதுமக்களிடம் சலுகை விலையில் விற்க உள்ளன. பாஸ்போர்ட் பெறுவது குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் விளக்கப்படுகிறது. பாமர மக்கள் பயனடையும் வகையில் மிக எளிமையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசா எடுப்பது குறித்து அயல்நாட்டு தூதரகங்கள் விளக்கம் தருகின்றன. கண்காட்சியில் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், வங்கி தொழிலாளர் சங்கங்கள், ஐடி நிறுவன ஊழியர்கள், கார் உற்பத்தி தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் என 3 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார் கூறினார்.   

No comments:

Post a Comment