Wednesday, January 9, 2013

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஊட்டி, : ஊட்டியில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பக்ரீத் விடுமுறையும் தொடர்ந்து வந்ததால், சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊட்டியில் உள்ள லாட்ஜ், காட்டேஜ்களில் அறை கிடைக்காமல், சுற்றுலா பயணிகள் திணறி வருகின்றனர். ஆயுத பூஜைக்கு முன்பு வரை நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. ஊட்டியில் தற்போது மழை இல்லாமல், வெயில் அடிக்கிறது. இது, சுற்றுலா தலங்களை
சுற்றி பார்க்க, சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக உள்ளது.

இன்று பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டியில் குவிந்துள்ளனர். தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியுள்ளது. 2வது சீசன் சூடுபிடித்துள்ளது. மிதி படகுகள் அதிகரிப்பு: ஊட்டி பழைய மற்றும் புதிய படகு இல்லங்களில் 175 படகுகள் உள்ளன. இதில், 65 மிதி படகுகள். சுற்றுலா பயணிகளில் பலர், மிதி படகுகளில் சவாரி செய்வதையே விரும்புகின்றனர். ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 25 மிதி படகுகள் புதிதாக வாங்க திட்டமிடப்பட்டது. இவை 2 மற்றும் 4 இருக்கைகள் கொண்ட படகுகள். முதற்கட்டமாக 12 மிதி படகுகள் படகு இல்லத்திற்கு வந்துள்ளன. இவைகள் விரைவில் வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. 

No comments:

Post a Comment