Wednesday, January 9, 2013

ஊட்டி பூங்காவில் பூ நாற்று நடவு தீவிரம்


ஊட்டி, :ஊட்டியில் கோடை சீசனில் அடுத்த ஆண்டு மே மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சிக்காக விதைகள் நடவு பணி மற்றும் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள் துவங்கின. அடுத்த மாதம் 20ம் தேதிக்கு மேல் நாற்று நடவு செய்யும் பணிகள் துவங்கும்.
பூங்கா துணை இயக்குனர் ராம்சுந்தர் கூறியதாவது:

மலர் விதைகள் சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்து விதைகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. நாற்றுகள் தயார் ஆனவுடன் பூக்கள் பூக்கும் மாதத்திற்கு ஏற்ப விதைகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இம்முறை 60 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளன. தற்போது மேரிகோல்டு, சால்வியா, பெட்டூனியம், போர்ட்லூகா, டெல்பீனியம் ஆகிய செடிகளின் விதைகள் நடவு பணிகள் துவங்கியுள்ளன.

நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் அடுத்த மாதம் துவங்கி பிப்ரவரி வரை நடைபெறும். 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் விரைவில் விதைகள் நடவு செய்யும் பணி துவக்கப்படவுள்ளது. இவற்றில் செடிகள் வளர்ந்து ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூக்கத்துவங்கும். மே இரண்டாவது வாரத்தில் நடக்கவுள்ள மலர் கண்காட்சியின் போது அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்துவிடும். இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இவ்வாறு ராம்சந்தர் கூறினார்

No comments:

Post a Comment