Wednesday, January 9, 2013

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஊட்டி, :ஊட்டி உள்பட நீலகிரியின் பல்வேறு இடங்களில் உறைபனி கொட்டுகிறது. கடும் குளிர் வாட்டி வருகிறது. தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அவதியடைந்தனர். பனிமூட்டத்தால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. காலை நேரங்களிலும் வாகன முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்க வேண்டியிருந்தது. ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 4.4 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது.

4.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரி மாதத்தில் மட்டுமே காணப்படும். இம்முறை நவம்பர் மாதத்திலேயே உறை பனி தாக்கம் அதிகரித்து உள்ளது. வரும் நாட்களில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் குளிர் மற்றும் உறைபனியால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

No comments:

Post a Comment