அருள்... பொருள்... இன்பம்... 7
இந்தக் கட்டுரையை எழுத அமர்ந்தபோது மின்சாரம் நின்று போனது. கும்மிருட்டு வேகமாக வந்து மண்டியது. இப்படிப்பட்ட இருட்டை விரட்ட ஒரு குறுக்கு வழியாக இன்வெர்ட்டர் என்னும் மின்சார சேமிப்பு சாதனத்தை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் சேமிக்கக்கூடிய அளவுக்கு மின்சாரம் ஒரு எட்டு மணி நேரமாவது பாய்ந்தால்தானே சேமிதமும் ஏற்பட முடியும்? இந்த இருட்டு பல மாதங்களாக தொடர்கிறது. ஆட்டிப் படைக்கிறது. இன்னமும் பல மாதங்கள் தொடரும் சாத்யக்கூறும் தெரிகிறது. இதன் பின்புலத் துக்குள் நுழைந்து யார் காரணம் என்று பார்ப்பதாலோ எது காரணம் என்று ஆய்வதாலோ இப்போதைக்கு எதுவும் ஆகிவிடப் போவதில்லை.
ஆனால் இந்த இருட்டு என் மனசுக்குள் பல சிந்தனைப் பொறிகளை கொளுத்திப் போட்டது. இத்தனை நீண்ட இருளை என் 54 வருட வாழ்வில் நான் கண்டதில்லை. என் பள்ளிப் பிராயத்தில் சில காலம் என் வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் என் தாயார் சிம்னி விளக்கை பயன்படுத்தியதை எண்ணிப் பார்க்கிறேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சமயம் பின் வீட்டின் உதவியால் மாதம் மூன்று ரூபாய் என்கிற கட்டணத்திற்கு உட்பட்டு ஒரு குண்டு பல்ப் முதன் முத லாய் என் வீட்டு கூடத்தில் எரிந்த சம்பவமும் அப்படியே பசுமையாக மனதில் இருக்கிறது. அப்போது இன்றுபோல நாம் மின்சார அடிமைகளாகவும் இல்லை. விளக்கை எரிக்கத்தான் மின்சாரம் என்கிற நிலை மெல்ல மாறி தண்ணீர் இறைக்க, மின்விசிறி சுழன்றிட, அதற்கும் பின் ஏ.சிக்கு என்று வளர்ந்துகொண்டே போனது.
மின்சாரம் ஐந்து பூதங்கள் சேர்ந்து பெற்ற பெரும் ஆறாம் பூதம். யாராலும் தவிர்க்கப்பட முடியாததாக இருப்பது இந்த ஆறாம் பூதமானமின்சாரம் தான்.
அரிசி, தண்ணீர் போல அத்யாவசியமாகிவிட்ட இதனை உருவாக்கி அடைவதிலும் இன்று பல வழிமுறைகள். இவ்வளவு வழிமுறைகள் இருந்தும், செவ் வாய் கிரகத்துக்கே விண்கலம் அனுப்ப முடிந்த அளவு திராணி படைத்த ஒரு நாட்டுக்குள்தான் இன்று இருள் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது. பிறக்கும்போது கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்துவிட்டது போல செல்போன், டிவியோட பிறந்து விட்டதாக கூறும் இன்றைய இளைய தலை முறை, வெப்ப வியர்வையோடு பெருமூச்சாய் விட்டுத் தள்ளுகிறது.
ஒரு வகையில் இது நல்லதாகவே எனக்குப் படுகிறது. ஏனென்றால் ஒளி நிகழ்த்தாத பாடத்தை இருள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இதனால் ஆட்சியாளர்கள் வீழ்ந்து போவார்களோ இல்லை சமாளித்து நிமிர்ந்து நடப்பார்களோ அது எதிர்காலத்துக்கே வெளிச்சம். ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டு இருளுக்குள்ளும் புழுங்கியபடி இருப்பவர்கள் ‘ஏன் இப்படி? எதனால்?’ என்ற கேள்விக்குள் விழுந்து, ‘இதற்கு என்ன தீர்வு?’ என்கிற தேடலிலும் இருப்பது ஒரு நல்ல விஷயம்.
இந்த மின்சாரம் ஒரு நூறாண்டாகத்தானே! அதற்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இது இல்லாமலே வாழவில்லையா? இமயம்வரை நம் கொடி பறக்கவிடப்பட்டதே, அதன் பின்னால் மின்னாற்றலா இருந்தது? எத்தனைக் கோயில்கள், குளங்கள், எவ்வளவு சிற்பங்கள்... அவ்வளவின் பின்னாலும் மனித மூளை மற்றும் உடலின் சக்தி மட்டும்தானே இருந்தது?
அன்றும் பொறிகள் எனப்படும் இயந்திரங்கள் இருந்தனவே? விற்பொறி, மயிற்பொறி, விசைப்பொறி என்று... ஒளியின் கீற்று நிழலாய் தரையில் விழு வதை வைத்தே நேரத்தை கணித்தார்களே! அன்றும் அணை கட்டினார்களே? எல்லாம் மனித சக்தியால்தானே? அதனாலேயே ஆரோக்யமாகவும் இருந்தார்கள். ஊளைச்சதை இல்லை. சர்க்கரை நோய் இல்லை. இருபது முப்பது வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணித்தார்கள் என்று ஒருவர்கூட இல்லை. வியர்க்க வியர்க்க உழைத்தார்கள். இயற்கையோடு கலந்து பிழைத்தார்கள். மின்சாரம் கண்டறியப்பட்டது. எல்லாமே மாறிப்போனது. இன்று தேசிய நோய்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று உடல் பருமன் - அடுத்தது சர்க் கரை!
சமீபத்தில் மருத்துவர் ஒருவரிடம் பேசியபடி இருந்தேன். ஒரு புள்ளி விவரம் தந்தார். ‘‘இன்று நூற்றுக்கு முப்பது பெண்கள் கருப்பை கோளாறுக்கு ஆளாகி அந்தப் பையையே எடுத்து விடுகிறார்கள். பெண்ணின் உன்னதமே அவளது கருப்பைதான்; அது இல்லாதவர்களை என்னவென்று சொல்வ து?’’ என்றும் கேட்டார். ‘‘என்று குக்கரில் சமைப்பது தொடங்கியதோ அன்று ஆரம்பித்தது வினை! அரிசிச் சோற்றின் அவ்வளவு சக்தியும் நீராவியாகி வெளியேறிவிட சக்கையைதான் தினம் தின்கிறோம். அடுத்து பெட்ரோலிய கேஸின் விளைவுகள். மண்பானைக்கு விடைகொடுத்து உருக்கில் உருவாகும் இரும்பை பதப்படுத்தி, எவர்சில்வர் ஆக்கி அதனை பாத்திரமாக்கிக் கொண்டது வசதியாக இ ருக்கலாம். ஆனால் ஆரோக்யமே இல்லை. அடுத்து அவ்வளவு உணவுப் பொருளுக்குள்ளேயும் ரசாயன உரம். ஆகக்கூடி சாப்பாடும் சரி, சமைக்கும் விதமும் சரி விஷமாகி விட்டது.
உணவு இப்படிக் கெட்டால், உடம்போ சுகத்துக்கு மிக பழகிவிட்டது. ஏசியை காட்டிக் காட்டி தோலுக்கு வியர்ப்பதே மறந்து விட்டது. பெண்களுக்கு தண்ணீர் இறைப்பதும் வாசலில் குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதும், அம்மி, ஆட்டுக்கல் அரைப்பதும், காய்கறி நறுக்குவதும் எல்லாமே அற்புதப் பயிற்சிகள். அவ்வளவையும் எந்திரங்கள் வந்து அவர்களை டம்மியாக்கி இன்று சீரியல் மம்மிகளாக மாற்றி விட்டன. இவர்களிடம் எப்படி இருக்கும் க ருப்பை?’’ என்று கேட்டார். டாக்டர் குறிப்பிட்ட அவ்வளவுக்கு பின்னாலும் மின்சக்திதான் பிரதானமானது. ஆண் வர்க்கம் மட்டும் என்ன வாழ்கிறது? எங்கே போவதாக இருந்தாலும் டூ-வீலர், ஒரு தொலைபேசி எண்ணைக் கூட ஞாபகம் வைத்துக்கொள்ள அவசியமில்லாத செல்போன் மற்றும் கம்ப்யூட் டர் எஜமானரின் அடிமைகள்தானே அவர்களும்!
மொத்தத்தில் மின்னாற்றல் நம் ஆற்றல் எனப்படும் மனித ஆற்றலை மலைப் பாம்பாய் விழுங்கி விட்டது. இன்று மின்சாரம் இல்லாததால் அம்மிகள் அசைகின்றன. ஆட்டுரல்கள் சுழல்கின்றன, உடம்பும் வியர்க்கிறது. இதெல்லாம் நன்மை. ஆனால், கூடவே தொழிலகங்கள் தூங்கி வழிந்திட, பொரு ளாதாரம் நசுங்கி, வாழ்க்கையே கேள்விக்குறியாகி வருவது நன்மையல்லதான். இருள் கொட்டி சிரிக்கிறது. இரவை நினைக்கவே பயமாக இருக்கிறது. இவ்வேளையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் தன்னை சந்தித்த ஒருவரிடம், ‘‘ஒரு வீடு சுத்தமாக இருப்பதை அந்த வீடுள்ள தெருவில் உள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிவதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். அதுவே ஒரு ஊரில் கோயில் நிரம்பி வழிந்தால் பக்தி வளர்ந்து விட்டதாக பொருள் அல்ல; மக்களிடையே அச்சமும் மன அழுத்தமும் அதிகரித்து விட்டதாகத்தான் கொள்ள வேண்டும்’’ என்றாராம்.
நாம் வெளியேற்றுவதுதான் நமக்கு திரும்ப வரும். அதற்காகத்தான் திருவிழாக்களை வடிவமைத்தோம். அன்று ஒன்றுகூடி மகிழ்ந்தோம். அதுதான் தி ரும்ப வருகிறது. இன்று இவ்வளவு இருள் சூழ்ந்திருக்கிறது என்றால் இது திடீரென வந்துவிடவில்லை. மனித மனங்களில் இருந்துதான் இது வெளிவந்துள்ளது. டாஸ்மார்க் பார்களில், கேளிக்கை விடுதிகளில் தங்களை மறந்து ஒவ்வொரு மனிதனும் வெளிக் கக்கியதுதான் இந்த இருட்டு. அதுதான் நாடு முழுக்க வளைத்துப் பிடித்துள்ளது. அவர்களை வளரவிட்டு வேடிக்கை பார்த்த பாவத்திற்கு நாமும் அனுபவிக்கிறோம், வேறு என்ன? இன்று நம்மை இருள் சூழ்ந்ததுபோல் இந்திர லோகத்தையும் இருள் சூழ்ந்த காலம் ஒன்று உண்டு. மகிஷன் எனும் அசுரன் காரணமாக தோன்றிய இருள் அது. அவனும் இந்திர பதவியை கைப்பற்றி இந்திரனையும் தேவர்களையும் ஓடஓட விரட்டினான். அவனை ஒரு பெண் சக்தியாலேயே அழிக்க முடியும் என்பதால் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் செயலிழந்து விட்டனர்.
மொத்தத்தில் தேவம் தவியாய் தவிக்க, அசுரம் ஆட்டம் போட்டது. அப்போது அசுர இருட்டை ஒழிக்க ஒரே வழிதான் இருந்தது. ஆதிசக்தியான பரா சக்தி தோன்றினால் மட்டுமே விடிவு. அவளை மறந்து ஏகபோகமாய் வாழ்ந்ததால்தான் அசுரமே தலை எடுத்தது. எனவே, அவ்வளவு தேவர்களும் ஒன் றுபட்டனர். ‘‘நாம் அவ்வளவு பேருமே அவளிடம் இருந்தே வந்தோம். இப்போது நாம் ஒன்றானால் அவள் வந்துதானே தீர வேண்டும்?’’ என்று கேட் டார் விஷ்ணு. அனைவரும் ஒன்றாகினர். மாதாவும் வந்தாள். மண்ணுயிர்களையும் காப்பாற்றினாள். நாமும் தவறுகளை உணர்ந்து ஒன்றானால் ஒளி நிச்சயம்! அது நீரானாலும் சரி, மின்சாரமானாலும் சரி.

No comments:
Post a Comment