Wednesday, January 9, 2013

சிறுவாணி அணை வறண்டது



கோவை, : மழை இல்லாததால் சிறுவாணி அணையில் கிடா வெட்டி கோவை மாநகராட்சி அதிகாரிகள் பூஜை நடத்தியுள்ளனர்.கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் மொத்த உயரம் 15 மீட்டர். மழை குறைவால், தற்போது 2.46 மீட்டர் உயரமே தண்ணீர் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சி ஏற்பட்டதில்லை. இந்த நிலை மாறி மழை பெய்ய வேண்டி மாநகராட்சி அதிகாரிகள், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிடா வெட்டி பூஜை நடத்தினர்.

இந்நிலையில், மாநகராட்சி பொறியாளர்கள் குழுவினர் மீண்டும் அணை நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கருப்பராயன் கோயிலில் கிடா வெட்டி பூஜை நடத்தினர். பிரதான நீர்த் தேக்கம், நீரேற்று நிலையம், நீரோடை, நீர் வரத்து உள்ள இடங்களில் ரத்தம் தெளித்துள்ளனர். கிடா மீது தீர்த்தம் தெளித்ததும் உடனே உடலை சிலிர்த்ததாம். இதை நல்ல சகுனமாக கருதி விரைவில் மழை பெய்யும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். குடிநீர் வடிகால் வாரியம் (சிறுவாணி பிரிவு) சார்பிலும் கருப்பராயனுக்கு பொங்கல் வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment