Wednesday, January 9, 2013

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்


ஊட்டி: ஊட்டியில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி 2 நாள் நடக்கிறது. இதை காண சுற்றுலா பயணிகள் குவியத் துவங்கியுள்ளனர். நீலகிரி கோடை விழாவை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை மலர்க்கண்காட்சி துவங்குகிறது. இதில் 17 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்ச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூக்களால் ஆன புலி, வரையாடு உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற உள்ளன. மேலும் இந்த ஆண்டு முதன்முறையாக மணல் சிற்பமும் இடம்பெறுகிறது. நாளை மறுநாள் வரை நடக்கும் கண்காட்சியை காண மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர்.

கண்காட்சியை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஊட்டியில் இருந்து கோவைக்கு கோத்தகிரி வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன. மலர்க்கண்காட்சியை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் இருந்து கோவைக்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாகனங்களில் பழுது ஏற்பட்டால், அவற்றை உடனுக்குடன் பழுது பார்க்க போலீசார் சார்பில் மீட்பு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment