Wednesday, January 9, 2013

ஊட்டியில் தொடர் மழை சுற்றுலா பயணிகள் தவிப்பு


ஊட்டி, : நீலகிரியில் மழை நீடிக்கிறது. இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் மிதமான மற்றும் தூறல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொட்டபெட்டா, பைக்காரா பகுதியில் மழை நீடிக்கிறது. கடும் பனிப்பொழிவும் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வெளியே தலைகாட்ட முடியாமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

கடந்த வாரம் நீலகிரியில் கன மழை பெய்தது. தற்போது மீண்டும் மழை துவங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையின்போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மழை தொடர்ந்தால் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் வாய்ப்பு உள்ளது. குன்னூர், கோத்தகிரி, செலாஸ், அருவங்காடு, தூதூர் மட்டம், கேத்தி, மஞ்சூர், லுந்தலா மட்டம், கைகாட்டி, பெங்கால் மட்டம் பகுதியிலும் மழை பெய்தது. இந்த மழையால் தேயிலை தோட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment