Wednesday, January 9, 2013

விவேகானந்தர் பாறைக்கு செல்ல டோக்கன் சிஸ்டம் அறிமுகம்





கன்னியாகுமரி, : உலக பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியை பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. படகில் செல்பவர்களுக்கு காலை 7.45 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை டிக்கெட் வழங்கப்படுவது வழக்கம்.

கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சுற்றுலா பயணிகள் பிற்பகல் 3.45 க்கு பிறகும் நீண்ட வரிசையில் காத்திருப்பர். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படகுகள் மட்டுமே உள்ளதால் அனைவரையும் அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 10ம் தேதி கலெக்டர் நாகராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது 3 மணிக்கு மேல் காத்திருப்போருக்கு டோக்கன் வழங்க ஆலோசனை கூறப்பட்டது.

இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.இது குறித்து கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் (பொறுப்பு) வின்சிலிராய் கூறுகையில், ‘‘கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் 3 மணியளவில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு எத்தனை படகுகள் இயக்க முடியும் என்பதையும் கணக்கிட்டு டோக்கன் வழங்கப்படும். மீதமுள்ளவர்கள் திருப்பி அனுப்பப்படுவர். இதனால் சுற்றுலா பயணிகளின் வீண் காத்திருப்பு தவிர்க்கப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment