அழகர் கோயில் (தொடர்ச்சி)
பொதுவாகவே அழகர் மலை, கள்ளழகர் என்றாலேயே ‘அழகர் ஆற்றில் இறங்கும்’ வைபவம் உடனே நினைவுக்கு வரும். கள்ளழகருக்கு உரிய திரு விழாக்களிலேயே மிகவும் பிரபலமானதும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதும் சித்திரைத் திருவிழாதான். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்த பக்தி சிறப்புமிக்க நிகழ்வு இடம் பெறுகிறது. இது கள்ளழகருக்கான பிரம்மோற்சவ விழா. இந்த பிரம்மோற்சவ விழாவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒரே சமயத்தில் கொண்டாடப்படுகின்றன. இதற்கு வித்திட்டவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு அந்நாளில் ஆட்சி புரிந்த திருமலை நாயக்கர்தான். இதன்மூலம், சைவ-வைணவ பக்தி ஒற்றுமைக்கு வழி கோலினார்.
மீனாட்சி அம்மன் கோயில் உற்சவம் திருமலை நாயக்கர் ஆட்சிக்கு முன்னால் மாசி மாதத்தில்தான் நடைபெற்றது. இதனால்தான் இந்த மாசி மாதத் தில் மீனாட்சி அம்மன் ரதம் செல்லும் வீதிகள் மாசி வீதிகள் (கிழக்கு மாசிவீதி, வடக்கு மாசிவீதி, மேற்கு மாசிவீதி, தெற்கு மாசிவீதி) என்றழைக்கப்ப ட்டன.
அதற்கடுத்து, இரண்டு மாதங்கள் கழித்து, சித்திரை மாதத்தில், சைத்ரோத்ஸவமாக, (சித்திரைக்கு வடமொழியில் சைத்ரம் என்று பெயர்) அலங்காநல் லூர், தேனூர் வழியாக மதுரை வந்து வைகை நதியில் இறங்கி, பிறகு வண்டியூர் சென்று தங்கி, மீண்டும் தன் மலைக்குத் திரும்புவது கள்ளழகரின் வழக்கமாக இருந்தது.
ஒரே பகுதியில் இருக்கும் இருபெருங் கோயில்களின் விழாக்களை தனித்தனியே, வெவ்வேறு நாட்களில் நடத்துவதைவிட, ஒரே சமயத்தில் நடத்தினால் அது பக்தர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று திருமலை நாயக்கர் நினைத்தார். அதாவது அக்கம் பக்க கிராமங்களிலிருந்து இந்த விழாக்களைக் காண வரும் பக்தர்கள் முதலில் மாசி மாதத்தில் வந்து மீனாட்சி வைபவத்தைக் காண்பார்கள். பிறகு அவரவர் ஊருக்குத் திரும்பிப் போய், சித்திரை மாதத்தில் மீண்டும் இதே பகுதிக்கு வந்து கள்ளழகர் உற்சவத்தில் கலந்து கொள்வார்கள். நடைப்பயணமாக இருமுறை அவர்களை வருத்தவேண்டா மென்ற நல்ல எண்ணத்தில்தான் நாயக்கர் இரு விழாக்களையும் சித்திரை மாதத்தில் கொண்டாடுமாறு வழி செய்தார்.
பின்னாளில் இந்த இரு சம்பவங்களையும் இணைக்கும்படியாக கதை உருவாயிற்று. அதாவது, மதுரையில், தன் சகோதரி மீனாட்சியின் திருமணத்திற் காக கள்ளழகர், அழகர் மலையிலிருந்து புறப்பட்டு வருவதாகவும் அப்படி வருபவர் வைகை நதியைக் கடந்து, சில இடங்களில் தங்கி இளைப்பாறிவி ட்டு வருவதற்குள் மீனாட்சி-சொக்கநாதர் திருமணம் முடிந்துவிட்டதாகவும் அந்த விவரம் கேள்விப்பட்ட கள்ளழகர், மீண்டும் அழகர் மலைக்கே திரும்பி விட்டதாகவும் அந்தக் கதை சொன்னது. ஆனால், பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக, பெருமாள் தீர்த்தவாரி காண்பது என்ற சம்பவம், இங்கே, கள்ளழகரைப் பொறுத்தவரை, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது.
சொந்த தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டிய அழகர், கடந்து செல்ல வேண்டிய தொலைவு கருதி சற்று முன்கூட்டியே மலையை விட்டுப் புறப்பட்டிருக்கலாம். இதனால் உரிய நேரத்தில் திருமண விழாவில் கலந்துகொள்ள முடிந்திருக்கும். முகூர்த்த நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த காலதாமதத்தால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலை கள் ளழகருக்கு ஏற்பட்டிருக்குமா என்பது ஐயமே. அதனாலேயே திருமணம் முடிந்ததாகத் தெரிந்தபின், பாதி வழியிலேயே அவர் திரும்பிவிட்டார் என்பதும் ஏற்கக்கூடியதல்ல. ஆகவே கள்ளழகர் கோயில் பிரம்மோற்சவ நிறைவு நிகழ்ச்சி, வைகை ஆற்றில் நிகழ, தீர்த்தவாரி கண்ட பெருமாள் மீண்டும் தன் கோயிலுக்கு எழுந்தருள, இந்த சம்பவத்தை, அவர் திருமணம் காண இயலாமல் திரும்பிவிட்டார் என்பதாக கதைக்கப்பட்டுவிட்டது!
ஆனாலும் திருமலை நாயக்க மன்னனின் பெருந்தன்மைக்கு மரியாதையும், நன்றியும் தெரிவிக்கும் வகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத் திலும், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணத்திலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் கலந்துகொண்டு மகிழ்கிறார்கள். தன்னால் ‘கலந்துகொள்ள இயலாவிட்டாலும்’ அழகர் கோயில் பெருமாள், தம் மூல அம்சமான மஹாவிஷ்ணு, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணத்தில் பங்கேற்று, தங்கையை, மகாதேவனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை உணர்ந்து மகிழ்கிறார் என்றே எடுத்துக்கொள்ளலாம்! சரி, கள்ளழகர் ‘ஆற்றில் இறங்கும் வைபவம்’ என்ன என்று பார்ப்போமா?
உற்சவர் அழகர், அழகாக அலங்கரிக்கப்படுகிறார். குதிரை வாகனத்தில் அமர்த்தி வைக்கப்படுகிறார். பிறகு பக்தர்கள் புடைசூழ வைகை நதியை நோக்கிச் செல்கிறார். வைகைக் கரைக்கு வந்தபின், ஆற்றில் இறங்கு முன், அவருக்கு ஒரு மாலை அணிவிக்கப்படுகிறது. இந்த மாலை ஸ்ரீவில்லிப்புத் தூரிலிருந்து வருகிறது. இது, ஆண்டாள், தான் சூடிக் கொடுத்த மாலை! இந்த மாலையை களிப்புடன் சூடிக்கொள்கிறார் கள்ளழகர். இது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடைபெறும் நிகழ்ச்சி. அடுத்து வைகை நதிக்குள் அழகர் இறங்கும்போது அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டழைப்பார். ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக்கொள்ளும் அழகு, மிகவும் உணர்வுபூர்வமானது. இச்சமயத்தில் வைகை நதியே பக்தர் வெள்ளத்தில் மூழ்கிவிடும்! பிறகு அழகர் ராமராயர் மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.
அங்கே வாண வேடிக்கை வண்ணக்கோலம் காட்டும். பக்தர்கள் வண்ண வண்ண உடை உடுத்தி ‘‘கோவிந்தா, கோவிந்தா...’’ என்று பக்தி மேலீட்டால்
அரற்றியபடி ஆடி மகிழ்வார்கள். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் என்ன வண்ணத்தில் உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அனை வருமே ஆர்வத்துடன் கவனிப்பார்கள். அவர் அணிந்திருக்கும் பட்டாடையின் வண்ணம் கொண்ட தானியம் அந்த ஆண்டு அபரிமித விளைச்சல் தருவ தாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த அழகர் மலைமேல் ஒரு கிணறு இருக்கிறது. இதற்கு அழகிய மணவாளன் கிணறு என்று பெயர். இந்தக் கிணறுக்கு ஒரு பெருமையே உண்டு.
அதாவது முகலாயர்கள் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கத்து அரங்கனைக் கொண்டு வந்து இந்த கிணற்றில்தான் பாதுகாப்பாக ஒளித்து வைத்தார்கள். இப்படி இருமுறை நடந்தது. அரங்கனுக்கே அடைக்கலம் கொடுத்த இந்தக் கிணற்றை பக்தர்கள் தொட்டு வணங்கி தம் நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறார்கள்.
நாறு நறும் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்
சொன்னேன் ஏறுதிருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ -என்று ஆண்டாள் இந்தக் கள்ளழகனுக்கு நூறு குடம் நிறைய வெண்ணெயும் நூறு குடம் நிறைய அக்கார அடிசல் என்ற பாயசம் அர்ப்பணிக்க ஆசை கொண்டாள்.
அவளது இந்த விருப்பத்தை, பின்னால் வந்த ராமானுஜர் இத்தலத்தில் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இதனை ‘ஆண்டாள் பாரித்து வைத்ததை எம்பெருமானார் பூரித்து வைத்தார்’ என்று குறிப்பிடுவார்கள். அவர்கள் இருவரது கால வித்தியாசத்தை மனதில் கொள்ளாமல், தங்கையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த அண்ணன் என்ற வகையில், ராமானுஜரை, ஆண்டாளின் அண்ணனாகவே கொண்டாடுகிறார்கள். இதனாலேயே பின்னாளில் ‘பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்று ஆண்டா ளைக் குறிப்பிட்டார்கள் போலிருக்கிறது. அரங்கனைக் கரம்பிடித்த ஆண்டாள், இந்தக் கள்ளழகர் மேல் பாசம் கொண்டது மட்டுமல்லாமல் இந்த இரு தலங்களுக்கு வேறு பல ஒற்றுமைகளும் இருக்கின்றன.
திருவரங்கம், திருமாலிருஞ்சோலை இரண்டும் உயர்ந்த மதில் சுவர்களையும் கோட்டையையும் கொண்டனவாக விளங்குகின்றன. இரண்டுமே நெல் சேகரிக்கும் பெரிய குதிர்களைக் கொண்டிருக்கின்றன. பிரதான வாயில்கள், ‘ஆர்யன் வாசல்’ என்றும் ‘ஆர்ய படர்’ என்றும் அழைக்கப்படுகின்றன. விளக்கேற்றுவதும் பிரசாதங்கள் தயாரிப்பதும் முற்றிலும் நெய்யினால்தான். திருவரங்க மதில்களை திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார்; திருமாலிருஞ் சோலை மதில்களைப் பெரியாழ்வார் பாடியிருக்கிறார். அரங்கன் ராமானுஜருக்கு அருள்பாலித்தான் என்றால், அழகன், கூரத்தாழ்வானை அரவணைத் துக்கொண்டான். இரு தலங்களிலும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் தரிசனம் அருள்கிறாள்.
மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த மலையடிவார அழகர் கோயில். ஆலயத் தொடர்புக்கு: 0452-2470228 மற்றும் 9943195856.

No comments:
Post a Comment