2௦13 எப்படி இருக்கும்..?
*ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடி மக்கள் அலைவர். சாதாரணமானவர்கள் கூட சாதனை செய்து உயர்வடைய முயற்சிப்பர்.
*உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இருப்பினும் பெண் குழந்தைகள் பிறப்பு குறையலாம்.
*அரசாங்கத் திட்டங்கள் செயல்பாடாக வெளிப்படும். சட்டதிட்டங்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டிவரும். வெளிநாட்டு அதிபர்களின் ஆதிக்கம் பெருகும்.
*பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார ஏற்றம் அதிகமாகும். விலைவாசிகள் ஏறுமுகமாகவே இருக்கும். புதிய வகை ஆடம்பர ஆபரணம் அறிமுகமாகும்.
*மின் தட்டுப்பாட்டை தீர்க்க மிக அதிகமான பங்கை சூரிய சக்தி தரும். சூரிய மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும்.
*கார்களின் விற்பனை படுஜோர். வர்த்தகத்துறை வெகுவான வளர்ச்சி பெறும். ரியல் எஸ்டேட், வாகனம், உணவகம், நகைத் தொழில்கள் அபிவிருத்தியடையும்.
No comments:
Post a Comment