Tuesday, January 8, 2013

சிக்கன் மஞ்சூரியன்(டிரை)




தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
ரெட் கலர் - 1 சிட்டிகை
மைதாமாவு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
சோளமாவு - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 சிறியது
குடமிளகாய் - 1 சிறியது
வெங்காயத்தாள் -4
சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டுவிழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில்க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.

வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும், கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
குறிப்பு:

1. விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்

No comments:

Post a Comment